கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையாம்பாளையம் ஊராட்சியில் காள ப்பநாய்க்கன் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது (க.ச.எண்424) தற்பொழுது இந்த குட்டையில் கழிவுநீர் கலந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்தும் மாசுபட்டு உள்ளது குட்டையின் அருகில் அரசு நடுநிலைப் பள்ளியும் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது மேலும் இக்குட்டை சுற்றி ஊராட்சி ஆழ்குழாய் கிணறுகள், பத்துக்கும் மேற்பட்ட விவசாய ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. இப் பிரச்சினையை குறித்து அதிகாரிகள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பல தடவை புகார் தெரிவித்தும் ஒரு சிறிய முயற்சி கூட இல்லை இந்த ஊராட்சியின் செயலர் செந்தில் எதையும் கண்டு கொள்வதில்லை இக்கிராமத்தில் நீர் ஆதாரமாக விளங்கும் இக்குட்டையினை சுத்திகரித்து கழிவு நீர் கலக்காமல் பாதுகாத்திட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இச்செய்தியை குறித்து முழு தகவல்களுடன் எமது பவர் நியூஸ் இதழில் காணலாம்.












Leave a Reply