செய்யாறு, டிச. 7 —
செய்யார் அடுத்த வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து இங்குள்ள ‘ரூரல் எய்ட் ஐக்கிய வளமனை சமுதாய நலக் கல்வி மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை மையத்தில் பயிலும் மாணவ — மாணவிகள் முன்னிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். பள்ளி வளாகத்திலேயே ‘கேக்’ வெட்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் — தி.மு.க., பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.











Leave a Reply