வேலூர், பிப். 17-
வேலூர் மாவட்டம், அம்மன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். செல்வகுமார். இவர் மாற்றுத்திறனாளியாவார். அவரது த/பெ.லேட்.இரா. முனுசாமி. அவர் அந்த கிராமத்தில் இரண்டு தலைமுறையாக வாழ்ந்து வருகிறார். அவருடைய மகன் எஸ். சத்தியகுமார் என்பவருக்கு கலைஞர் கனவு இல்லம், தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். ஆனால் இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று மன வேதனையோடு தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் (திங்கட்கிழமை 16-ம் தேதி) காயிதே மில்லத் கூட்டரங்கில் மூன்றாவது முறையாக ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தகவலை கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியுடன் தெரிவித்தார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மற்றும் கே. வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி ஆகியோரிடமும் மனு கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.











Leave a Reply