வேலூர், ஜன. 13-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நரிமுருகப்ப முதலி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாவா எனப்படும் போதை பொருளை இயந்திரம் வைத்து தயாரித்த கோதண்டபானி (48) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் போதை பொருளை தயாரித்தது அம்பலம் ஆனது. அங்கிருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகள், உயர் ரக சுண்ணாம்பு மற்றும் 10 கிலோ அளவுக்கு மாவா போதைப்பொருள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த தகவல் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











Leave a Reply