ஒடுகத்தூரில் மாரத்தான் போட்டி தொடக்க விழா: எம்எல்ஏ நந்தகுமார் பங்கேற்பு!

வேலூர், ஜன.12-
திமுக தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, ஒடுகத்தூர் பேரூராட்சியில்  திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும்  மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு கொடி யசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் கணபதி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.