வேலூர், மார்ச் 14-
வேலூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சேவல் இ .நித்தியானந்தம் 13ம் தேதி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ், கைத்தறி ஆடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் நகர பொருளாளர் சத்தியமூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி மற்றும் அதிமுகவின் நிர்வாகிகள் கஸ்பா ஆர்.மூர்த்தி, எஸ். டி. மோகன்ராஜ், வீ. கருணா , விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்களும் தங்களது வாழ்த்துக்களை நித்தியானந்தத்துக்கு தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து நித்தியானந்தம் அனைவருக்கும் தனது பிறந்த நாளையொட்டி நேரில் வந்து தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து அறுசுவை உணவு விருந்து பரிமாறப்பட்டு உபசரிக்கப்பட்டது.











Leave a Reply