வேலூர், பிப். 27-
கல்லூரி மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் தப்பி ஓடி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் தொரப்பாடி ராம்சேட் நகர் பகுதியைச் சேர்ந்த அப்சல் ஷெரீப்புக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் அவரது மகள் ஆயிஷா பர்வீன் (19) என்பவர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் உயிரி தொழில்நுட்பம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக ஆயிஷா பர்வீன் வீட்டில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அரியூர் ஜீவரத்தினம் பகுதியைச் சேர்ந்த வினோத் (19) இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆயிஷா பர்வீனை கழுத்தை அறுத்து விட்டு அவரது இடது பக்க வயிற்றில் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆயிஷா பர்வீனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆயிஷா பர்வீனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சி.எம்.சி.மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்
ஆயிஷா பர்வீனை கத்தியால் குத்திய வினோத், 12ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்ததும், ஆயிஷா பர்வீனை ஒரு தலை பட்சமாக காதல் செய்து வந்ததாகவும், அந்தப் பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு அந்த பெண் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வினோத் இந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வினோத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வினோத் காதல் தோல்வியால் அந்தப் பெண்ணை கத்தியால் குத்தி விட்டுச் சென்றாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Leave a Reply