வேலூர்,பிப்.20-
வேலூர் மாவட்டம், காட்பாடி, சித்தூர் -கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது இந்தியன்ஆயில் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்க் வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு சொந்தமானதாகும். இந்த பெட்ரோல் பங்க்கில் பணிபுரிபவர்கள் தான் தோன்றித்தனமாகவும், தெனாவெட்டாகவும் இந்த பெட்ரோல் பங்க்கிற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக நான்கு கனரக வாகனங்களான கார், ஆட்டோ மற்றும் பேருந்துகள், லாரிகள் ஆகியவற்றிற்கு தனியாக இடம் ஒதுக்கி அந்த இடங்களில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்படும்.இதுதான் அனைத்து பங்க்கிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் பங்க்கில் விருப்பப்படி கண்ட இடங்களில் கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி நுகர்வோருக்கு பெரும் மன உளைச்சலையும், நேர விரயத்தையும் ஏற்படுத்துகின்றனர் இங்கே பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் பம்ப் ஆப்ரேட்டர்கள். இது குறித்து புகார் எழுதுவதற்கு ஒரு வாடிக்கையாளர் உங்கள் பங்க்கில் உள்ள புகார் புத்தகத்தை கொடுங்கள் என்று கேட்டதற்கு அந்த புத்தகங்கள் எல்லாம் இங்கு கிடையாது. உங்களுக்கு தரவும் இயலாது என்று அங்கு பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரியும் ஒரு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கூறுகிறார். இதற்கு காரணம் நுகர்வோர் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை அவ்வளவுதான். குறிப்பாக ஒருமையில் பேசுவதையும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதையும் புகார் பதிவு செய்ய முடியாமல் நுகர்வோரை அலை கழிப்பதையும் இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆதலால் இந்த வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த பெட்ரோல் பங்க்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக ஆய்வு நடத்தி இந்த பங்க்கில் புகார் புத்தகம் உள்ளதா? இல்லையா? வாடிக்கையாளர்கள் தரும் புகார்களை எங்கு பதிவு செய்கிறீர்கள் என்று உரிய முறையில் விசாரணை நடத்தினால் இங்குள்ள தில்லுமுல்லு வெளியில் வரும். இது குறித்து விசாரணை நடத்தி இந்த பங்க்கில் இந்த பெட்ரோல் பங்க்கின் மேலாளர் மற்றும் இங்கு பணிபுரியும் பம்ப் ஆப்ரேட்டர்கள் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நுகர்வோரிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் அந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியில் இருந்து விடுவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்புடைய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக அலுவலர்கள் செய்வார்களா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவார்களா?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Leave a Reply