வேலூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய முன்னாள் ஒன்றிய குழு தலைவர்!

வேலூர், ஜன.24-
வேலூர் மாநகராட்சி 22, 23, 24 ஆகிய வார்டுகளில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாண்டையொட்டி ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி ரங்காபுரத்தில் நடந்தது. இந்த எளிய நிகழ்வுக்கு ஊர் நாட்டாண்மைதாரர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவருமான பி.பி. சந்திரபிரகாஷ் முன்னிலை வகித்தார்.
வேலூர் மாநகர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், முன்னாள் ஒன்றிய தலைவருமான சி.கே. தேவேந்திரன்,  தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்வில் பாரத், கட்சியின் துணைத் தலைவர் ராஜேந்திரன், சுகாதார மேற்பார்வையாளர்கள் மேகராஜ், உதயராஜ், ரவி, வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.