வேலூர்,ஜன.23-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சிவராஜ்நகர் பகுதியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில், செயல்படும் ஒரு சில ஓட்டுநர்களும், ஒரு சில நடத்துநர்களும், தாங்கள் வாங்குகின்ற சம்பளத்திற்கு ஏற்றபடி வேலை செய்கிறார்களா? என்றால் அதுதான் இல்லை. ஒரு சில ஓட்டுநர்களும், ஒரு சில நடத்துநர்களும், தனியார் பேருந்து நடத்துநர்களிடமும், ஓட்டுநர்களிடமும் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தமிழக அரசின் பேருந்துகள் செல்லும் நேரங்களை அனுசரித்து (அட்ஜஸ்மென்ட்) செய்வதாதவும், பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான, பேரணாம்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் ஒரு சில நடத்துநர்கள் பயணிகளுக்கு மீதி சில்லரைகளை திருப்பி தராமல் ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். என்றும் இப்படி அடுத்தவர்களின் பணத்தை கொள்ளையடித்து பசி ஆறும் இதுப்போன்ற நபர்கள், வேறு எதையாவது சாப்பிட்டு, உயிர்வாழலாம், என்றும் இதுபோன்று ஊர் பணத்தில் உடம்பை வளர்க்கும் திருட்டு கும்பல்கள், எதற்கு உடைகளை அணிகிறார்கள் என்றும் பயணிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.இதுகுறித்து புகார்களை அளிக்கச் சென்றால் பணிமனையின் கிளை மேலாளர், இருக்கையிலேயே இருப்பதில்லை என்றும் கிளை மேலாளரை லென்ஸ் வைத்துத் தேடினாலும், கிளை மேலாளர், கிடைப்பதில்லை என்றும், பயணிகள் தரப்பில்00எ கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரியும் வேலூர் மாவட்ட கழக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரும் நேரில் ஆய்வு செய்து தவறுகள் செய்யும் மேற்கண்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது..











Leave a Reply