வேலூர், ஜன. 19-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கம்பன் கழகத்தின் 13ஆம் ஆண்டு விழாவுக்கு வருகை தந்த வி.ஐ.டி., துணைத் தலைவர் ஜி.வி.செல்வத்துக்கு கைத்தறி ஆடையும், புத்தகம் வழங்கியும், பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றார் புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர் கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ். புத்தகத்தை விழா மேடையிலேயே வாங்கி வாசித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார் ஜி. வி. செல்வம். இந்த நிகழ்ச்சியின் போது எஸ். ரமேஷூடன் குடியாத்தம் நகர புதிய நீதி கட்சியின் நகர பொருளாளர் கே.வி.ப.சத்தியமூர்த்தி, கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என்.பழனி, தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலாளர் கே.எம்.பூபதி, கவிஞர் பா. சம்பத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.











Leave a Reply