வேலூர், பிப். 9-
வேலூர் மாவட்டம்,
காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மீட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடி சென்றனர். இது குறித்து பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (21), சந்தோஷ் (18), ஆகிய இருவரையும் பிரம்மபுரம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.











Leave a Reply