வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கி இந்து சமய அறநிலையத்துறை அசத்தல்!

வேலூர், ஜன. 17-
தமிழ்நாடு அரசு சட்டமன்ற அறிவிப்பை தொடர்ந்து தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புத்தாடைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன் மற்றும் வேலூர் மண்டல இணை ஆணையர் விஜயா, ஆய்வர் செண்பகம் மற்றும் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். புத்த ஆடைகளை பெற்றுக் கொண்ட அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் இந்து சமய அறநிலையத்துறைக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு சென்றது  குறிப்பிடத்தக்கது.