25-ம் நாளாக செய்யாறு கலைஞர்சிலை அருகே அன்னதானம் வழங்கல் !

செய்யாறு, ஜன. 27 –
செய்யாறு கலைஞர் சிலை அருகே 25-ம் நாளான நேற்று  மாவட்ட பிரதிநிதி ஆக்கூர் முருகேசன்
ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆக்கூர் கிளைக் கழக செயலாளர் ஐயப்பன், கூழமந்தல் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். உக்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், ஆக்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வக்கித்தனர்.
இதையடுத்து வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.,சீனுவாசன், செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், முன்னாள் நகர செயலாளர் சம்பத், புரிசை சிவா,
கவுன்சிலர்கள் ரவி, கோவேந்தன், ராஜலட்சுமி அண்ணாதுரை, கோபு ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்.