வேலூர்,ஜன.27-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு 1-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஒய் .அதிகுர் ரஹ்மான் சார்பில் 77 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகரமன்ற உறுப்பினர் ஒய் .அதிகுர் ரஹ்மான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ். முக்தார் அகமது, சமூக ஆர்வலரும், பேரணாம்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவருமான, என்.முகமது ஆகியோர்கள் கலந்துகொண்டனர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நகர தலைவர் ஆழியார் உவேஸ் அகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர தலைவர் எஸ்ரியாஸ் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்.எம்.எஸ்.ஜாகீர் அகமத், பயாஸ் அகமத், ஹாரிஷ் அகமத், ஆதம் பாஷா, மாஸ்டர் மதார் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்











Leave a Reply