
வேலூர், அக். 28-
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கால்வாய் சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இரண்டாவது நாளாக வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக வேலூர் மாநகர செயலாளருமான
ப.கார்த்திகேயன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். விரைவாக பணியை முடிக்க வேண்டும் என்றும், மேலும் வேலூர் லாங்கு பஜாரில் உள்ள “குயின் மேரி கிளாக் டவரை” பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை விரைவில் தொடங்க வேண்டும் என்றும், லாங்கு பஜார் மணிக்கூண்டின் மேலே உள்ள அரச செடிகளை முற்றிலும் வெட்டி அகற்றவும் எம்எல்ஏ உத்தரவிட்டார்.
இந்த கள ஆய்வின் போது எம்எல்ஏவுடன்
மண்டல தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான
வீனஸ் ஆர். நரேந்திரன், உதவி ஆணையர் ஸ்டான்லி பாபு,
மாமன்ற உறுப்பினர்
வி. எஸ். முருகன்,
பகுதி கழக செயலாளர்
வி. ஜி. கே.சுந்தர்விஜி,
பாலமுரளி கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி பொறியாளர் ஜெயக்குமார், இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.











Leave a Reply