வேலூர்,பிப்.23-
வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வேலூர் கோட்டை ஏற்கனவே ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக பெயரளவில் உள்ளது இந்த கோட்டை பதினாறாம் நூற்றாண்டு கட்டிடக்கலைக்கு உத்திரவாதம். பெரிய அகழி (முன்பு முதலைகளுடன்), ஜலகண்டேஸ்வரர் கோயில், மசூதி, தேவாலயம் ,அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிப்பாய் கலகம் நடந்த இடம் என்றும் அறியப்படுகிறது.இவ்வளவு முக்கியத்துவம் இந்த பகுதியாக வேலூர் கோட்டை திகழ்கிறது. மேலும் இந்திய தொல்லியல் துறையால் இந்த கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோட்டையைச் சுற்றியுள்ள பூங்காக்களை பராமரித்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைய ரயில்கள் விடுவது, அகழியில் படகு சவாரி விடுவது, இயற்கை காட்சிகளை மேம்படுத்துவது, அரசு பொருட்காட்சியில் உள்ளது போல் அரங்கங்கள் அமைப்பது, ராட்டினங்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதனால் அரசு வருவாயை அதிகம் ஈட்ட முடியும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன். பலருக்கு வேலை வாய்ப்புகளும், சுய தொழில் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தங்கக் கோயில், சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருபவர்கள் இந்த கோட்டைக்கு வந்து ஒரு விசிட் செய்வார்கள். வேலூரில் பொழுதுபோக்குக்காக பொது இடங்கள் இல்லை. எனவே வேலூர் கோட்டை மற்றும் பூங்காக்களை சுற்றுலா தலம் ஆக்கினால் உள்ளூர்வாசிகளும அல்லது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதுபோக்க வசதியாக இருக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் மேற்சொன்ன கருத்துக்களை நினைவில் கொண்டு மாநகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று அவர் தனது கோரிக்கை மனுவியல் தெரிவித்துள்ளார். அரசு இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்து கோட்டையை சுற்றுலாத்தலமாக நடவடிக்கை எடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Leave a Reply