வேலூரில் பிப்-28ல் ஏ.ஐ.தொழில்நுட்ப கருத்தரங்கு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்!

வேலூர், பிப். 16-
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் பெல்லியப்பா கட்டடத்தில் நடைபெற்றது.  தேசிய அறிவியல் தினம் முன்னிட்டு தேசிய அறிவியல் விஞ்ஞானி ஆர்.ராமானுஜம் அவர்களின் பங்கேற்புடன் அறிவியலும் எ.ஐ.தொழில்நுட்பமும் கருத்தரங்கு நடத்திட தீர்மானித்துள்ளது.
மாவட்ட தலைவர் முத்து.சிலுப்பன் கூட்டத்திற்கு  தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் கூட்டப் பொருள்கள் முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட மாநாடு பரிசீலனை, மாவட்ட மாநாட்டு வரவு செலவு, உறுப்பினர் சேர்க்கை ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர்கள் வீ.குமரன், டி.சசிகலா, சா.குமரன், இணை செயலாளர் பி.சுகுமாரன், வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் மக்கள் நல சந்தையின் ஒருங்கிணைப்பாளர் உழவன் அறக்கட்டளையின் விருது பெற்ற கு.செந்தமிழ்செல்வன்  பாராட்டப்பட்டார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வேல்முருகன், பி.ராஜேந்திரன், பெ.ராமு, இல.சீனிவாசன், பொன்.வள்ளுவன், ரொ.ஜெகன், சா.பிங்கிசெல்ஷியா, ந.வெண்ணிலா அ.ஷெஹனாஸ்பாதிமா, பி.கோகிலா, அ.பாஸ்கர், ச.இளவழகன், பி.எப்சி, ஆர்.ராதாகிருஷ்ணன், பி.ரவீந்திரன், கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்:
1)பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அனைத்து ஒன்றியங்களிலும் தேசிய அறிவியல் தினம் முன்னிட்டு அறிவியல் நிகழ்வுகளை செயல்படுத்துவது.  28.02.2026 அன்று தேசிய அறிவியல் விஞ்ஞானி முனைவர் பேராசிரியர் ஆர்.ராமானுஜம் பங்கேற்கும் அறிவியலும் ஏ.ஐ.தொழிநுட்பமும் என்ற கருத்தரங்கம் வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியிலும், பேரணாம்பட்டு ஒன்றியத்திலும் நடத்துவது.  என தீர்மானிக்கப்பட்டது.
2) சர்வதேச மகளிர் தினம் மார்ச்-8 அன்று வேலூரில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது.
3)மாவட்ட செயல்பாடுகளுக்கு துணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.  கல்விக்குழுவுக்கு என்.கோட்டீஸ்வரி, அறிவியல் பிரச்சாரக்குழுவிற்கு பி.சுகுமாறன், அறிவியல் வெளியீடுகள் சா.குமரன், சமம்-டி.சசிகலா, சுற்றுசூழல் குழு-பி.ராஜேந்திரன், இளைஞர்களுக்கான அறிவியல் குழு பி.ரவீந்திரன், மக்கள் நலவாழ்வு இயக்கம் ஆர்.ரோதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்
கீழடி மனிதன் முதல் தகவல் அறிக்கை என்ற அறிவியல் பிரசுரத்தினை மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் வெளியிட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் மாவட்ட பொருளார் பேரா.ஆர்.காயத்திரி நன்றி கூறினார்.