வேலூர், பிப். 13-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே ஓடும் தனியார் பேருந்தில் 18 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 52 வயது தோல் வியாபார புரோக்கர் அப்துல் லத்தீப் கைது செய்யப்பட்டார்.
18 வயது உள்ள கல்லூரி மாணவி ஒருவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தனியார் பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது அவரது அருகில் வந்து நின்ற 52 வயது மதிப்புடைய தோல் வியாபாரி அப்துல் லத்தீப் அந்த கல்லூரி மாணவியை உரசி அவருடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார் அவர் விரட்டி அடித்தும் அப்துல் லத்தீப் விலகிச் செல்லாமல் மீண்டும் மீண்டும் சென்றலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதை அடுத்து செய்வதறியாது திகைத்து போன கல்லூரி மாணவி தொலைபேசி வாயிலாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பேருந்து நிலையத்தில் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.











Leave a Reply