வேலூர்,பிப்.27-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் பேட்டை அழகு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த புதிய நீதி கட்சியின் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ் .ரமேஷ் மற்றும் எம்.டி. திருவேங்கடம் ஆகியோர் இணைந்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காளியம்மன் பட்டி அருகே கைத்தறி நெசவாளர்கள் பயன்படும் வகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி கைத்தறி பூங்கா திறக்கப்பட்டது. தற்போது பூங்காவை நிர்வகிக்கும் அதிகாரியான கைத்தறித்துறை ஆய்வாளர் காவேரி பணியாற்றி வருகிறார் .ஆனால் இந்த அதிகாரி பூங்காவை செயல்படுத்த எந்தவித முயற்சியும் இதுநாள் வரை எடுக்கவில்லை. அவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இவர் அரக்கோணம் அதாவது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சரக கைத்தறி ஆய்வாளராக உள்ளார் .ஆனால் இவரை குடியாத்தம், வேலூர் மாவட்டத்தில் பகுதியில் உள்ள கைத்தறி பூங்காவை பராமரிக்கும் அதிகாரியாகயாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இது எப்படி பொருந்தும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இந்த பூங்காவுக்கு என்று ஒரு நிரந்தர அதிகாரி மற்றும் இரவு காவலர் மற்றும் பூங்காவை பார்ப்பதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பூங்காவில் எந்தவித தொழில் அதாவது கைத்தறி நெசவுகள் லுங்கி, பட்டுப்புடவை, பெட்ஷீட், டவல் போன்ற பொருட்களை நெய்து வருபவர்களை பார்ப்பதற்கு வரும் பொது மக்களை கவரும் வகையில் பேசுவதற்கும் மற்றும் இந்த பூங்காவின் நோக்கத்தை சொல்வதற்கும் ஒரு பணியாளர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் இந்த பூங்காவில் மாலை 6:00 மணிக்கு மேல் பூங்காவின் வெளிப்புறத்தில் மதுபானங்களை அருந்திவிட்டு அந்த பாட்டில்களை அப்படியே வெளியில் விட்டு விட்டு செல்கின்றனர் சில சமூக விரோதிகள். மேலும் இந்த பூங்காவின் வெளிப்புறத்தில் தள்ளுவண்டி கடைகள், அசைவ உணவு, பானி பூரி கடைகள் உள்ளன .இது சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மதுபானங்கள் அருந்துவதோடு மது பிரியர்களின் கூடாரமாக மாறி
உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திறந்த வெளி பாரை நிரந்தரமாக அப்புறப்படுத்துவதற்கு காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இடத்தில் வெளிப்புறத்தில் சுற்றுச்சுவர் அமைத்து கேட் கதவு அமைக்க வேண்டும் என்று பலமுறை உதவி இயக்குனர், கைத்தறித்துறை ,வேலூர் அவர்களிடமும் முன்னாள் அமைச்சர் ,கூட்டுறவு சங்க தலைவர்களை நேரில் சந்தித்தும் முறையிட்டும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையையும்
துறை அதிகாரிகள் எடுக்கவில்லை என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. மேலும் இந்த பூங்காவை பராமரிக்கும் கைத்தறித்துறை ஆய்வாளர் காவேரி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வது குடியாத்தம் பகுதியில் உள்ள சங்கப் பணியாளர்களை ஒருமையில் பேசுவது மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது மேலும் ஒரு தலை பட்சமாக பேசுவது, மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சங்கப் பணியாளர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு பேசி அவருகாகு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார் இந்த கைத்தறி துறை ஆய்வாளர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. பெண் சங்க ஊழியர்களையும், பணியாளர்களையும் பூங்காவை பராமரிக்க வேண்டும் என மிரட்டுவது எந்த வகையில் நியாயம். எந்த விதத்தில் இவர் இதை செய்கிறார் என்றும் எங்களுக்கு புரியவில்லை மற்றும் தெரியவில்லை. இவர் மீது எந்தவித நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கவில்லை. இவர் மீது நடவடிக்கையை துறை ரீதியாக எடுக்க வேண்டும். மேலும் இதை தாங்களே நேரடியாக வருகை தந்து ஆய்வு செய்து பூங்காவில் இருக்கும் குறைகளையும், முறைகேடுகளையும் நிவர்த்தி செய்து இந்த பூங்காவிற்கு நிரந்தரமாக பராமரிக்க ஒரு சரியான கைத்தறி ஆய்வாளரை நியமனம் செய்து பூங்காவை பராமரிக்க இரண்டு பணியாளர்களையும் புதியதாக நியமனம் செய்து கைத்தறி பூங்காவை நல்ல முறையில் செயல்படுத்த தாங்கள் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது .















Leave a Reply