வேலூர், பிப். 2-
மாணவர்களிடையே இந்திய அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன்,
ரிபப்ளிகன் வெல்ஃபேர் அறக்கட்டளை சார்பில்
அரசியலமைப்பு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி
விருதம்பட்டு – ராஜ்துர்கா மினி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ரிபப்ளிகன் வெல்ஃபேர் அறக்கட்டளை நிறுவனரும், வழக்கறிஞருமான வே. மணிபாரதி தலைமையேற்று நடத்தினார்.
மாணவர்களுக்கு அரசியலமைப்பின் முக்கியத்துவம், அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் சமூக நீதியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக
மணிகண்டன் – காட்பாடி காவல் உதவி ஆய்வாளர்
கலந்து கொண்டு,
“அரசியலமைப்பை அறிதல் என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் சிறப்பு விருந்தினராக தமுமுக கட்சி சார்பில்
சுரேஷ் பாபு கலந்து கொண்டு,
மாணவர்களின் பேச்சுத் திறமைகளை பாராட்டி, சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்கை எடுத்துரைத்தார்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்கள்,
அரசியலமைப்பு, ஜனநாயகம், சமூக சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பான உரைகளை நிகழ்த்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில்,
அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடரும் என
ரிபப்ளிகன் வெல்ஃபேர் அறக்கட்டளை சார்பில் உறுதியளிக்கப்பட்டது.











Leave a Reply