விருதம்பட்டு பகுதியில் சேதமடைந்த பாலத்தில் வாகனங்கள் இயக்கம்: புதிய பாலத்தை விரைந்து கட்டித்தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர்,டிச.3-
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட விருதம்பட்டு பகுதியில் விஷ்ணு திரையரங்குக்கு பின்புறம் சிவன் கோயில் தெரு செல்லும் பாதையில் ஒரு சிறு வாய்க்கால் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக விருதம்பட்டு பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வர உபயோகித்து வருகின்றனர்.
இந்த
பாலம் பழுதடைந்து  அபாயகரமாக உள்ளதால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆதலால் இந்த பாலத்தினை பழுது பார்த்து விரைந்து மக்களின் உயிரை காக்குமாறு தமிழக அரசினை எதிர்பார்த்து இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை தமிழக அரசு வருகின்ற சட்டமன்ற பேரவை தேர்தலுக்குள் நிறைவேற்றித் தரவேண்டும் என இப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர். பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.