தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 234 தொகுதிகளிலும் மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட துணைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி பொறுப்புகளை அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிக்காக பல்வேறு மக்கள் நலனில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த தளபதி சபிக் தன்னுடைய அரசியல் பொது வாழ்வில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த செய்தி அறிவிப்புகள் வந்தவுடன் கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.











Leave a Reply