வேலூர், நவ.25 –
வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக காட்பாடி போலீசாருக்கு தொலைபேசி வாயிலாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண்ணை மீட்டு போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வசந்தா (52), சந்திரசேகர் (41 )ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Leave a Reply