கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின்  பூட்டை உடைத்து திருடிய இருவர் கைது!


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியில் நகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் பயணித்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த தாஸ் (30), சூர்யா( 25) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் குடியாத்தம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து திருடியதும் அப்போது விசாரணையில் தெரியவந்தது .இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.