செய்யாறு த.வெ.க.,வின் கிழக்கு ஒன்றியத்தில் புதிய அலுவலகம் திறப்பு விழா !

செய்யாறு, ஜன. 27 –
செய்யாறு த.வெ.க.,வின் கிழக்கு ஒன்றியத்தில் புதிய அலுவலகத்தை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் நேற்று திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது பாண்டியம்பாக்கம் கூட்டுரோடு. இந்த பகுதி செய்யாறு த.வெ.க.,வின் கிழக்கு ஒன்றியமாகும். இதன் ஒன்றிய  செயலாளராக ராகவன் இருந்து வருகிறார். இவரது தலைமையில் த.வெ.க.,வின் புதிய அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி தனது பொற்கரங்களால் திறந்து வைத்தார். பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்களான ரமேஷ், ரகு, பிரசாந்த், சுரேஷ், பாபு, கீதா, மத்திய ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.