ஆலோசனை வழங்கினார்
தரணிவேந்தன் எம்.பி.,




செய்யாறு, டிச. 22 –
செய்யார் அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கிளைக் கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து
தரணிவேந்தன் எம்.பி., ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்
தரணிவேந்தன் கலந்து கொண்டு கிளைக் கழக நிர்வாகிகளை சந்தித்து வாக்காளர்களின் நிலை எப்படி உள்ளது என, கேட்டறிந்தார். நமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள மகத்தான திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். கடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும், நாடாளுமன்றத் தேர்தலில், எனக்கு சுருட்டல் கிராம மக்கள் கூடுதலாக 227 வாக்குகளை அளித்துள்ளனர். இதற்காக பணியாற்றிய உங்களையும் – சுருட்டல் கிராம வாக்காளர்களையும் நான் வரவேற்கிறேன்.
இதேபோல் 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், சுருட்டல் கிராமத்தில் கூடுதல் வாக்குகளை நாம் பெற வேண்டும். இதற்காக 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ள நீங்கள், கிராம மக்களை தினமும் சந்திக்க வேண்டும். இந்த முறையும் செய்யார் சட்டசபை தொகுதியை தி.மு.க., தான் கைப்பற்ற வேண்டும். இதற்காக ‘நான்கு மாதத்திற்கு’ உங்களது உழைப்பை, நீங்கள் கண்டிப்பாக செலவிட வேண்டும் இவ்வாறு தரணி வேந்தன் எம்.பி., கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனையை வழங்கினார்.
பட விளக்கம்:
செய்யார் அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சுருட்டல் கிராமத்தில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் தி.மு.க., கிளைக் கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வழங்கினார். ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.










Leave a Reply