தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர், துணை முதல்வருக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நெடுஞ்சாலை துறை சார்பில் கோடி நன்றி என பேட்டி .

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நெடுஞ்சாலை கட்டுமான பாரமரிப்பு துறை முன்பு சாலை பணியாற்றினார் மற்றும் அரசு ஊழியர்கள் சார்பில் உதவி கோட்டபொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் சாலை பணியாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதே போன்று தேனி பங்களா மேட்டில் உள்ள தேனி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு. நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், சாலை பணியாற்றினார் ஆகியோர் பட்டாசு வெடித்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்கள்.










Leave a Reply