வேலூரில் 658 பேருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்!

வேலூர், நவ.22-
வேலூரில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை இடைப்பட்ட காலத்தில் போலீசார் பரிந்துரையின் பேரில், மொத்தம் 658 பேரின் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். குறிப்பாக விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக 73 பேர், குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 85 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியது 129 பேர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 14 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 658 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்று போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்காமல் விதிகளை மதித்து இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.