காட்பாடியில் நேற்று முன் தினம் இரவு அதிகபட்சமாக 71.20 மில்லி மீட்டர் அளவில் மழை பொழிவு

காட்பாடி பகுதி தண்ணீரில்  மிதக்கும் அவலம்!
வேலூர்,அக்.27-
வேலூர் மாவட்டம், காட்பாடியில் நேற்று முன்தினம் காலையிலும், இரவு 7.30 மணி அளவில் தொடங்கிய கனமழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதனால் நகரப் பகுதி முழுவதும் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது. குறிப்பாக காட்பாடி வள்ளி மலை கூட்டுரோடு, காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறை மற்றும் காட்பாடி வள்ளிமலை ரோட்டில் மின்வாரிய அலுவலகம், காட்பாடி சித்தூர் உபேருந்து நிலையம், காட்பாடி தாராபடவேடு ஏரி, காட்பாடி கழிஞ்சூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் தண்ணீரில் மிதந்தன.மற்றும் தாழ்வான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராத நிலை ஏற்பட்டது. குறிப்பாக இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். பலர் தங்களது இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் தள்ளிக் கொண்டு தங்களது வீடுகளுக்கு மழையில் நனைந்தவாறு சென்றது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு மழை காட்பாடி பகுதியில் பெய்தது இல்லை என்று குறிப்பாக வரலாறு காணாத மழை என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் காலை 8.30 முப்பது மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவில் ஒடுகத்தூர் 16 மி.மீ., குடியாத்தம் 24.60 மி.மீ., மேல ஆலத்தூர் 35.40 மி.மீ.,  மோர்தானா அணை 1 மி.மீ., ராஜா தோப்பு அணை 28 மி. மீ., வட விரிஞ்சிபுரம் 36 மி.மீ., காட்பாடி 71.20 மி. மீ.,பொன்னை 27.60 மி.மீ.,திருவலம் சர்க்கரை ஆலை 25 மி.மீ.,  பேரணாம்பட்டு 32.80 மி.மீ., வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 30.80 கி.மீ., வேலூர் தாலுகா அலுவலகம் 44.30 மி. மீ., ஆக மொத்தத்தில் மழையின் மொத்த அளவு 362.90 மி.மீ., ஆகும். மாவட்டத்தின் சராசரி மழை அளவு 31 .. 01 மி.மீ., ஆகும். குறிப்பாக சித்தூர் பேருந்து நிலையத்தில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீர் வழக்கம்போல் சாலையில் வழிந்து ஓடி கருப்பு நிறமாக காட்சி அளித்தது. இதில் பலர் நடக்க முடியாமல் வழிக்கி விழுந்து படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நகரின் முக்கிய பகுதியான சித்தூர் பேருந்து நிலையம் மிகவும் கேவலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியை வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. காட்பாடி தொகுதி எம்எல்ஏவும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் ஏரிகள் உடைப்பெடுத்து தண்ணீர் ஆங்காங்கே பாய்ந்து ஓட ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் தஞ்சம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மழை வருவதற்கு முன்பாகவே மழை நீர் வடிவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யாமல் ஆண்டுதோறும் வேடிக்கை பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது வேலூர் மாநகராட்சி நிர்வாகமும், வேலூர் மாவட்ட நிர்வாகமும் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. இனிவரும் காலங்களிலாவது பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வடிகால் பணிகளை முறையாக முடித்து வைத்து மழைக்கு தயாராக இருப்பார்களா? மாவட்ட நிர்வாகமும், வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் என்று கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர் காட்பாடி பகுதி வாழ் மக்கள். இந்த நிலை மாறுமா? இல்லை அப்படியே தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.