அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., இன்று (15.12.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செந்துறை அரசு மாதிரி (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 20.12.2025 சனிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைத்தும் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.











Leave a Reply