செய்யாறு, டிச. 7 —
செய்யாறில் அம்பேத்கரின் 69வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், பொறுப்பாளர்கள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்தியாவின் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யாறின் மையப் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக செய்யாறின் மத்திய ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி செய்திருந்தார். திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கரின் புகழைப் பற்றி சிறிது நேரம் பேசினர். இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். புதியதாக பொறுப்பேற்றுள்ள செய்யாறின் மத்திய ஒன்றிய செயலாளரான புவனேஸ்வரிக்கு சக பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.













Leave a Reply