தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளர் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு!

வேலூர், மார்ச் 8-
தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளர் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் 07.03.2026 அன்று ஏலகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மோகன சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுக்குழுவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பா.ஐயப்பன், மாநில தலைவர், இ.பிரகாஷ், மாநில பொதுச் செயலாளர், த.ஞானவேல், மாநிலத் துணைத் தலைவர், உள்ளாட்சி நிதி தணிக்கை, ப.பெருமாள், மாநிலத் துணைத் தலைவர், அரசுத் துறை தணிக்கை, பொருளாளர் தாமரைச்செல்வன், சதீஷ்குமார், உதவி செயலாளர் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை அலுவலர் மன்ற தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு உள்ளாட்சி தணிக்கை ஊழியர் சங்க தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.