விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ சுவாமிகள், ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் பாராட்டு!
வேலூர், டிச. 29-
தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் 25ஆம் ஆண்டு தொடக்க வெள்ளி விழா, மாதாந்திர நாட்காட்டி வெளியீட்டு விழா, திருமண தகவல் மையத்தின் ஆண்டு விழா என முப்பெரும் விழா 28.12.2025 ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில் வேலூர் ஆவனா இன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் தலைமை தாங்கி வெள்ளி விழா ஆண்டின் நிகழ்வினை தொடக்கி வைத்து பேசினார். விராட் விஸ்வகர்ம சேவாலயா அமைப்பின் இயக்குநர், சன் தொலைக்காட்சியின் நல்ல காலம் பிறக்குது நிகழ்வின் ஜோதிடர் முனைவர் கே.பி. வித்யாதரன் ஆச்சாரியார் சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
குருசுவாமிகள் மற்றும் ஜோதிட முனைவர் இருவரும் 25ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றி வரும் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கதராடை அணிவித்து பாராட்டினார்.
முன்னதாக நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராஜன் விழா தொகுப்புரையாற்றினார். சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி, துணைத்தலைவர்கள் எல்.பன்னீர்செல்வம், எம்.ஞானசம்பந்தன் விஸ்வமலர் குழு தலைவர் எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குநர் சித்த மருத்துவர் கே.மீனாட்சி சுந்தரம் சங்கத்தின் திருமண தகவல் மையத்தின் 24ஆம் ஆண்டு பதிவுகளை தொடக்கி வைத்து பேசினார்.
விஸ்வகர்ம ஜெகத்குரு சீனந்தல் மடாலயத்தின் குருபூஜை விழாக்குழு தலைவர் ஜி.விஸ்வநாதன், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் சட்ட ஆலோசகர் வை.நடனசிகாமணி, வட்டாட்சியர் பழனிவேல்ராஜன், உதவி பேராசிரியர் எஸ்.குமரகுரு, ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியார் ஏ.அருணாசலம், மின்வாரிய ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர் இரா.லோகநாதன், விரிஞ்சிபுரம் விஸ்வகர்ம திருமண மண்டப அறக்கட்டளையின் தலைவர் எஸ்.என்.கணேச ஆச்சாரி, பொருளாளர் கோபால் ஆச்சாரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் எம்.பிச்சாண்டி, வேலூர் மாவட்ட தலைவர் விசுவநாதன், வடக்கு மண்டல செயலாளர் ஜி.நந்தகுமார் சங்கத்தின் நிர்வாகிகள் சு.சோமாஸ்கந்தன், எம்.செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கே.குப்பன், எம்.அன்பரசு, எம்.சீனிவாசன், ஜெ.ஜெயபிரகாஷ், தி.எஸ்.சக்ரீஸ்வரன், ஜி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முடிவில் பொருளாளர் ஜெ.மணிஎழிலன் நன்றி கூறினார்.













Leave a Reply