கோவை மாவட்ட மேட்டுப்பாளையம்ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் மக்காத நெகிழிப் பொருட்களைஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர் அகற்றினர்

அக்டோர் மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கவும் விலங்குகள் மற்றும் காடுகளை காக்கவும்
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்காக வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவ – மாணவியர்கள் கல்லூரி முதல்வர் முனைவர் சுகுணாதலைமையில்
முனைவர் பத்மாவதி வணிகவியல் துறை பேராசிரியர் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருடன் இணைந்து
நெகிழிப் பொருட்களை ஒழிப்பதை மையமாகக் கொண்டு மேட்டுப்பாளையம் ஓடந்துறை வனச்சோதனை சாவடி அருகில் உள்ள பகுதிகளில் குப்பையாக கிடந்த 400 கிலோ எடையுள்ள நெகிழி குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர்
இப்பணியில் வனத்துறையைச் சேர்ந்த
வனவர் சிங்காரவேலு மற்றும் வனக்காப்பாளர்கள் அக்கிம், முனுசாமி உதயண் ஆகிய 20 வனக்காப்பாளர்களும்
ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி
மாணவ மாணவியர் இணைந்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர்.