வேலூர்,நவ.16-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ,
மருத்துவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மருத்துவ இயக்குநர்,
மருத்துவ அலுவலர் மற்றும் டாக்டர்கள் ,செவிலியர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.











Leave a Reply