செய்யாறு கலைஞர் சிலை அருகே3வது வார்டு கவுன்சிலர் ஏற்பாட்டில் அன்னதானம் !

செய்யாறு, பிப். 6 –
செய்யாறு கலைஞர் சிலை அருகே 35ம் நாளான நேற்று  மூன்றாவது வார்டு கவுன்சிலர் ரமேஷ்
ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.  ஒன்றிய செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் அசோக், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் கலைஞர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து தி.மு.க., பொறுப்பாளர்களான மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்
சி.மகேந்திரன்,
கவுன்சிலர்கள்  கோவேந்தன், ரவிக்குமார், அண்ணாதுரை, சூரிய பிரகாஷ் , தர்மலிங்கம்,  3வது வார்டு நிர்வாகிகளான பிரகாஷ், செந்தில், தாண்டவராயன், வடிவேல், ஸ்ரீதர், சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன்  ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.