செய்யாறு, பிப். 3 –
தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, செய்யாறில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் – பொதுமக்கள் என, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யாறில் த.வெ.க.,வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. செய்யாறு புறவழிச் சாலை உள்ள இக்கட்சி அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்டம், த.வெ.க.,வின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து திருவத்திபுரம் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில், துப்புரவு பணியாளர்கள் – பொதுமக்கள் என, 500 பேருக்கு பிரியாணி பொட்டலங்களை அன்னதானமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்களான ஏ.கே.ஹாரூண், உதயசங்கர், அஸ்கர், ரியாஸ், விக்னேஷ், விஜய் அமித் ராஜ், ஹாசிம், கதிர், பழனி மற்றும் நிர்வாகிகள், கிளைக் கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.













Leave a Reply