செய்யாறில் தி.மு.க., சார்பில் சுவர் விளம்பரம் தயார் ?பூர்த்தி செய்ய வேண்டிய வேட்பாளர் எம்.கே.கார்த்திகேயனா ?

செய்யாறு, மார்ச் 23 –
செய்யாறு சட்டசபை தொகுதிக்கு தி.மு.க., சார்பில் சுவரொட்டி விளம்பரம் ‘ரெடி’ இதில், தேர்தல் தேதி – பதிவாகி விட்டது. கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களும் எழுதியாச்சி, சுவற்றில் சின்னமும் உதிக்க தொடங்கிவிட்டன. ‘திரு என்று தொடங்கி — என்னும் முடியும் இடத்தில் யார் பெயர் இடம் பெறப்போகிறது. அந்த வரிசையில் முதல் இடத்தில் ஏழாச்சேரி எம்.கே. கார்த்திகேயனும், இரண்டாம் இடத்தில் ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., ஜோதியும், மூன்றாம் இடத்தில் பார்வதி சீனுவாசன், நான்காம் இடத்தில் மாமண்டூர் ராஜ் என தொகுதி மக்களால் பரவலாக பேசப்படுவது காதுகளுக்கு கேட்கிறது. மக்கள் செல்வாக்கை கொண்டவர் யார்? அவர் பொறுத்திருந்து பார்ப்போம். தி.மு.க., சார்பில் இந்த சுவரொட்டி விளம்பரம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிராமத்தில் எழுதப்பட்டுள்ளது.