செய்யாறில் ஜே.ஆர்.சி., மாணவர்கள் – ஆசிரியர்களுக்கானதலைமைப் பண்பு குறித்த 2 நாள் பயிற்சி !

செய்யாறு, ஜன. 25 –
செய்யாறில் மெட்ரிக் சி.பி.எஸ்.சி., பள்ளிகளைச் சேர்ந்த  ஜே.ஆர்.சி., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு குறித்து 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர்களான இடைநிலை, தொடக்கக் கல்வி  தலைமையேற்று நடத்தினர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர்
வ.சுரேஷ்,  ரோட்டரி மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, ஸ்ரீதர், பிரதாப் ஆகியோர் தொடக்க விழா உரையாற்றினர்.
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன்      ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், மருத்துவர் மதன் உடல் நலத்தை  காப்பது குறித்து பயிற்சி மூலம் விவரித்தார்.
தொடர்ச்சியாக வட்டார போக்குவரத்து அலுவலர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  மற்றும் உறுதி மொழியை ஏற்கச் செய்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  ‘நாளைய தலைவர்கள் நம் பள்ளியில்’ என்ற தலைப்பிலும்,  –  ஆளுமை திறன் என்னும் தலைப்பிலும் – மனதைத் திறக்கும் மந்திர திறவுகோல் என்ற தலைப்பிலும் பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கான கோலப்போட்டிகள்  நடைபெற்றது.
முகாம் நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஜோதி எம்.எல்.ஏ., செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயின், வி.ஜி.பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரையிலா அமைப்பு சேர்மன் க.கோவேந்தன்,
செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவர் விஜயவர்மன், சுதாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.