சங்கரன்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் அருகே உள்ள வெள்ளப்பனேரி, தெற்கு அச்சம்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தெற்கு அச்சம்பட்டியில் கிரிக்கெட் போட்டியும்,
வெள்ளப் பனேரியில் விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. இதில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார், துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திருமலைக்குமார், அரசு வழக்கறிஞர் அன்பு செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய பிரதிநிதி ராஜதுரை, கிளை கழகச் செயலாளர்கள் திருமலாபுரம் முருகன், சுகுமாரன், ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சோம செல்வ பாண்டியன், திமுக நிர்வாகிகள் சட்டநாதன், ஜெயக்குமார், மடத்துப்பட்டி விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி மதி, கலைச்செல்வன், செல்வ சூரியன், கருப்பானூத்து பாண்டி, சுப்பையா தேவர், வேலுச்சாமி, குழந்தை பாண்டி, சீவலப்பாண்டி, அழகுராஜா, பால்பாண்டி, சின்ன பாண்டி, மருதுபாண்டி, சுப்பையா பாண்டியன், அழகப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.