சமயநல்லூரில்


முதுபெரும் தலைவர்
நல்லகண்ணு-விற்கு

அனைத்துக் கட்சியினர் புகழஞ்சலி!


மறைந்த முதுபெரும் தலைவர் நல்ல கண்ணுவிற்கு சமயநல்லூரில் அனைத்துக் கட்சியினர் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சமயநல்லூர் வணிகர் சங்கச் செயலாளர் கனி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சி. மலையாளம், தி. மு.கிளைக் கழக அவைத்தலைவர் எஸ். சிதம்பரம், ஏ. பி. பிரபு நாகேந்திரன் (தி. மு. க), மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கருணாநிதி, பெத்தனன், கண்ணன், மலர்விழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குமார் உட்பட பலர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.