வேலூர், டிச.14-
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 80,000 பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் கூட்டு ரோட்டில் இருந்து காந்திநகர் செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் குடியாத்தம், பரதராமி, கே. வி. குப்பம், பள்ளி கொண்டா, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ் கண்ணா பணியிட மாறுதலாகி வேறு ஊருக்கு பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்த செந்தில் பதவி உயர்வு பெற்று கடந்த மாதம் அதாவது ஒரு வாரத்திற்கு முன்புதான் மோட்டார் வாகன ஆய்வாளராக குடியாத்தத்தில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல் இடைத்தரகர்கள் மூலம் கெடுபிடியாக பணம் வாங்கியதாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதாவது 12 .12 .2025 அன்று மாலை 6 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில், வேலூர் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கோடீஸ்வரன், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர் இளவரசன் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் திடீரென மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் உள்ளே பணியில் இருந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் வாகனங்களை பதிவு செய்ய வந்திருந்த வாகனங்களின் உரிமையாளர்கள், மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் ஊழியர்கள் அங்கேயே அமர வைக்கப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் .மேலும் அவர்கள் வெளியேற போலீசார் அனுமதிக்கவில்லை. ஆய்வு முடிந்தபின் வெளியே அனுமதிக்கப்படுவீர்கள் என அவர்கள் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் தொடர்ந்து நடந்த சோதனையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூபாய் 80,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அதிரடி சோதனை இரவு 10 மணி வரை அதாவது 4 மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செந்தில் குடியாத்தத்திற்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணிக்கு வந்து ஒரு வாரமே ஆன நிலையில் புரோக்கர்கள் போன் செய்தால் மட்டுமே அவர் தனது போனை தொடர்பு கொண்டு பேசுவார். மற்ற யாராக இருந்தாலும் எத்தனை முறை போன் போட்டாலும் அவர் தொலைபேசி அழைப்புகளை அவர் எடுப்பதே இல்லை. குறிப்பாக பணம் பணம் பணம் என்று அலைந்து கொண்டிருந்தார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. குறிப்பாக அதே வீதியில் உள்ள ஆயிஷா டிரைவிங் ஸ்கூல் என்ற நிறுவனத்தை நடத்தும் ரியாஸ் அஹமத் என்பவர் இவருக்கு வலதுகரமாக செயல்படுகிறார். அதாவது வலதுகரமாக இவர் புரோக்கர் வேலையை கணக்கச்சிதமாக செய்து வருகிறார். இங்கு வரும் மொத்த பணத்தையும் வசூல் செய்து மாலை 5 மணிக்கு பிறகு மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ரியாஸ் அஹமது. இந்த தகவல் வெளியில் கசியாமல் இருப்பதற்காக செய்தியாளர்கள் என்ற போர்வையில் வரும் பலருக்கும் ரூபாய் 300 முதல் ரூபாய் 500 ரூபாய், ரூ. ஆயிரம் வரையில் இவர் அன்பளிப்பாக வழங்கிவிட்டு இவர் ஒரு தனி கணக்கை எழுதி செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி அதிலும் லாபம் பார்க்கிறார் இந்த ரியாஸ் அகமது. இவரை வைத்துக்கொண்டு வேலையை பார்த்து வந்ததால் வசூல் வேட்டை நடத்திய செந்தில் வந்த ஒரு வாரத்துக்கு உள்ளாகவே இவர் பணமோகம் பிடித்து அலைகிறார் என்பதை மோப்பம் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவரை நன்கு கண்காணித்து இவரை பொறிவைத்து பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமா? இவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குறிப்பாக இவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட இவருக்கு பக்கபலமாக பின்புலமாக செயல்படும் இது போன்ற டிரைவிங் ஸ்கூல் அதிபர்களான புரோக்கர்களை இந்த சட்ட ரீதியான வழக்கில் இணைத்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். இனி லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Leave a Reply