வேலூர்,டிச.16-
வேலூர் மாநகரின் முக்கிய போக்குவரத்து மையமான பழைய பேருந்து நிலையம் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்பட்டன. இதையடுத்து வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகளை (15 ஆம் தேதி) காலை முறைப்படி தொடங்கியது .இதில் பயணிகள் வசதிக்காக நடைபாதைகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பேருந்து நிறுத்துமிடங்கள் ஆகியவை மேம்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த பணிகள் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply