ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பொருட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் அமைப்பு செயல்பட்டு வருகிறது.


மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பு துறை பணியாளர்கள் இணைந்து கொண்டாடிய பொங்கல் திருவிழா அவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையேற்று பொங்கல் விழாவை துவங்கி வைத்தார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சுவாமி ஹரிநாதானந்தர் மற்றும் குழுவினர் மேற்கொண்டனர்.
வித்யாலய சாது பெருமக்கள் சுவாமி தத்பாஷானந்தர், சுவாமி திரிலோக்மானந்தர், சுவாமி சூர்யாத்மானந்தர், சுவாமி யோகாமிருதானந்தர், சுவாமி சர்வபாலானந்தர், சுவாமி ஹரிநாதானந்தர், .எஸ் ஆர். எம்.வி. கலை அறிவியல் கல்லூரி செயலர் கந்தப்பன், இயக்குநர் ஸ்ரீதர், அச்சகம் மற்றும் பராமரிப்பு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.










Leave a Reply