வேலூர், நவ.23-
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலை ஏரியின் கரையோரம் ஷாகிரா என்ற மூதாட்டியின் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது மலைப்பகுதியில் இருந்து வந்த மலைப்பாம்பு அதனை இறையாக்க முழுவதுமாக சுற்றி விழுங்க முயன்றது. அச்சமயத்தில் ஷாகிரா பார்த்துவிட்டு கூச்சலிட்டார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வருவதற்குள் ஆட்டுக்குட்டியை அங்கேயே விட்டுச்சென்று தலைமறைவானது மலைப்பாம்பு. இருப்பினும் ஆடு இறந்து விட்டதால் மூதாட்டி பெரும் கவலையில் ஆழ்ந்து விட்டார். இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.











Leave a Reply