
துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்,அக்.26-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு 3-வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகரில் கடந்த நான்கு ஐந்து நாட்களாக மழை பெய்தது. இதனால் தெருக்கள் சேறும், சகதியுமாக உருமாறியுள்ளது. எம்.ஜி.ஆர்.நகரில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் நடக்கவே முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பேரணாம்பட்டு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் எம்.ஜி.ஆர். நகரில் நேரில் களஆய்வு செய்து சேறும், சகதியுமாக உள்ள தெருக்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சுத்தம் செய்து கொடுக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்.நகர், பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர் அவரது பணியை கூட செய்வதற்கு இயலாமல் சோம்பி கிடக்கிறார். இதனால் அவரது பணியை செய்ய தவறும் பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு அதிகாரிக்காக மக்களா? மக்களுக்காக அரசு அதிகாரி சேவை செய்ய வேண்டுமா? என்பதை உமாசங்கர்தான் முடிவு செய்து கொண்டு தனது பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் எம்ஜிஆர் நகர் வாழ் பொதுமக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. நிலைமை என்ன ஆகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்










Leave a Reply