வேலூர், நவ.18-
வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு காட்பாடி தொகுதியில் உள்ளது. மாமன்ற உறுப்பினராக அன்பு என்பவர் உள்ளார்.1வது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆங்காங்கு சாலைகள் குண்டும் குழியுமாக, சரியான சாலை வசதி இல்லாமலும், கழிவு நீர் கால்வாய் செல்ல வழி இல்லாமலும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் சென்று கலப்பதால் ஏரிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், நீர்நிலைகளில் ஒரு சிலர் வீடுகளை கட்டிக்கொண்டு வசிப்பதாகவும், ஒரு சிலர் புதியதாக வீடு கட்டும்போது சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வீடுகளை கட்டுவதாகவும் அந்தப் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் தரப்பில் கண்டு கொள்வதே இல்லை. புதிய வீடுகளை கட்டிக் கொள்ள அனுமதி கொடுக்கும் போது வீடு கட்டும் இடங்களை அதிகாரிகள் கப்பம் பெற்றுக்கொண்டு நேரில் வந்து ஆய்வு செய்வதில்லை. ஸ்மார்ட் சிட்டி என்னும் பொலிவுறு திட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிவடையாமல் சாலைகள் தோண்டப்பட்டும், அப்படியாக தோண்டப்படும் பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அமைச்சராக இருக்கும் துரைமுருகனின் தொகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது . எனவே இது குறித்து வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மேற்கண்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.











Leave a Reply