வேலூர், டிச.3-
வேலூர் மீன் மார்க்கெட் கன்சால்பேட்டை பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லரையாகவும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மீன் மார்க்கெட்டில் கடை எண்கள்18, 19 ,20 என மூன்று கடைகளை தொடர்ந்து எடுத்து நடத்தி வருபவர் பி.அப்து . பி.அப்து பிரதர்ஸ் ஃபிஷ்ஷரிஸ் என்ற பெயரில் கடையை நடத்தி வருகிறார். வேலூர் மீன் மார்க்கெட்டில் மட்டுமல்லாது இவரது கடையின் கிளைகள் வேலூர் கோட்டையின் எதிர்புறம், காட்பாடி, சத்துவாச்சாரி, விரிஞ்சிபுரம், பாகாயம் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கடைகளில் எல்லாம் எடை குறைவாக உள்ளதாக இந்த கடையில் மீன் வாங்கும் நுகர்வோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மற்ற கடைகளில் விற்பனை செய்யும் மீன்களை விட விலை அதிகமாகவும் வைத்து இவர் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது .குறிப்பாக மீன்களை செருப்பு கால்களுடன் மதிப்பது மற்றும் கண்ட இடங்களில் மீன்களை வைத்து அதை சுத்தம் செய்யாமலே அப்படியே நுகர்வோருக்கு விற்பனை செய்து வருவது அருவெறுக்கத்தக்கதாக உள்ளது என்று நுகர்வோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன் மீன்களை சுத்தம் செய்து சரியாக தருவதில்லை என்ற புகார் இந்த கடையின் மீது நுகர்வோர்கள் கூறுகின்றனர். ஆனால் இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் இந்த மீன் கடையில் மாமூலை பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். இதனால் இந்த அப்து பிரதர்ஸ் காட்டில் பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறதாம்.
நுகர்வோர் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு இதுபோன்ற பெருச்சாளிகளின் அட்டகாசத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ,பொதுமக்கள் மீது அக்கறை கொண்ட நல விரும்பிகளும் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இதுபோன்ற திமிங்கலங்களிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. இதற்கு பிறகு தமிழக அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Leave a Reply