தென்காசி, ஜன. 19-
தென்காசி உழவர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் 20 டன் காய்கனிகள் சுமார் ரூ. 8 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களான காய்கனிகள், மஞ்சள் கிழங்கு, கரும்பு, பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் மண்பாண்ட பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர் .இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடனும் வாங்கி சென்றனர். மேலும் வேளாண்மை துணை இயக்குனர் வசந்தி ஆலோசனையின் பேரில், உழவர் சந்தை நிர்வாகம் மற்றும் விவசாயிகள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அமலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மாரியப்பன், உதவி நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.












Leave a Reply